ATTENTION READERS: As a personal tribute to writer Pa. Singaram, English translation of his epic novel "Puyalile Oru Thoni" (புயலிலே ஒரு தோணி) is being published in serialized form in this blog.

Friday 24 March 2023

உன்னைக் கொன்றதாகச் சொன்னாய் by Emily Brontë

 நான் உன்னைக் கொன்றுவிட்டதாக

நீ சொன்னாய்.

அப்படியென்றால்

பேயாக வந்தாவது என்னைத்

தீண்டிவிட்டு போ.

 

என்னைப் பைத்தியமாக்கும்

எந்த உருவத்தில்

நீ வந்தாலும்

எனக்குப் பயமில்லை.

 

உன்னிடம் நான் வேண்டுவது

ஒன்றே ஒன்றுதான்.

நான் உன்னை கண்டுபிடிக்க முடியாத

நரகம் ஒன்றில்

தன்னந்தனியாக மட்டும்

என்னைத் தள்ளிவிட்டுச் சென்று விடாதே.

---------------

Source: A conversation from “Wuthering Heights”, a novel written by Emily Brontë

In Tamil : Saravanan. K


No comments:

Post a Comment

Drop your message here...

Name

Email *

Message *